லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு: தீவிர பிரிவில் தொடர் சிகிச்சை

 

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் 10 – 12 நாள்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயது முதிர்வு காரணமாக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மருமகள் தெரிவித்தார். 

இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவர் பிரதித் சம்தானி, கரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>