லதா மங்கேஷ்கர் மறைவு: இந்திய கிரிக்கெட் அணி மரியாதை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் விளையாடும் இந்திய வீரர்கள், மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கையில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், லதா மங்கேஷ்கர் கிரிக்கெட்டை விரும்புபவர் என்றும் கிரிக்கெட் விளையாட்டுக்கும், இந்திய அணிக்கும் அவர் எப்போதுமே ஆதரவு தெரிவித்தவர் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். மாலை 6.30 மணிக்கு மும்பை சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>