லதா மங்கேஷ்கர் மறைவு: ஏ.ஆர். ரஹ்மான், திரைத் துறையினர் இரங்கல்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92) பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | லதா மங்கேஷ்கர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>