லாக்மே ஃபேஷன் வீக் 2017 பாலிவுட் தேவதைகளின் ராம்ப் வாக்!

சென்சேஷனலான திரைப்படங்கள் மூலமாக மட்டுமல்ல, வர்ண ஜாலத்தில் மெய் மறக்கச் செய்யும் அனுபவங்களுடன் தனது ஃபேஷன் ஷோக்களுக்காகவும் புகழ்பெற்றது பாலிவுட். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக கம்பீரமான சிவப்பு, அமர்த்தலான கருப்பு, அசர வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஷேட்களுடனான ஆடைகள், மிருதுவான ஐவரி, குளுமை தரும் ஐவரி என அத்தனை நிறங்களிலும் பறந்து விரிந்த கவுன்களை ஆடையென அணிந்து வந்து அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருக்கிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டும். கீழே லாக்மே ஃபேஷன் வீக்கில் பாலிவுட் தேவைதைகள் ராம்ப் வாக்கிய… அதாவது ஒய்யார நடையிட்ட புகைப்படங்களைக் கண்டால், உங்களுக்கே புரியக் கூடும்.

நவீன ரகத்தில் வடிவமைக்கப்பட்ட டிஸைனர் ஆடைகளுக்காக மட்டுமல்ல அவற்றில் பயன்படுத்தப்பட்ட கிரியேட்டிவ்வான வண்ணங்களின் சங்கமமும் கூடத்தான் லாக்மே ஃபேஷன் 2017… என்பதை உணர்த்தும் வகையில் சுமார் 14 மாடலிங் அழகிகள் மேடையில் அவரவர் பிரத்யேக டிஸைனர்கள் வடிவமைத்த ஆடைகளுடன் படு ஸ்டைலாக ராம்ப் வாக் செய்தனர். மாடலிங் அழகிகளோடு, பாலிவுட் ஸ்டார்களும் கண்களைக் கொள்ளை கொண்டது அழகு!

1. வண்ணங்களின் மீதான காதல்…

2. வாணி கபூர்:

லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக படு ஃப்ரெஷ் ஆன இளஞ்சிவப்பு நிற வெட்டிங் கவுனில் வலம் வரும் வாணி கபூர்.

3. நர்கிஸ் ஃபஹ்ரி…

டிஸைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கைவண்ணத்தில் உருவான, மென்மையான மஞ்சளில், தங்க நிறச் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான வெட்டிங் கவுனில் வலம் வந்தார் நடிகை நர்கிஸ் ஃபஹ்ரி.

4.திஷா பதானி…

டிஸைனர் ரீத்து குமாரின் கைவண்ணத்தில் உருவான வெள்ளையில் இளஞ்சிவப்பு பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட கேஷுவல் கவுனில் திஷா பதானி.

5. சித்ராங்கதா சிங்… 

நேஹா அகர்வாலின் பிரத்யேக டிஸைனான பழங்குடித் தேவதைத் தனமான ஒரு அடர் நீல வண்ண நீண்ட கவுனில் ஓவியம் போல ஒய்யாரமாக வலம் வந்தார் நடிகை சித்ராங்கதா சிங்…

6. ஸ்ரீதேவி & குஷி கபூர்…

தங்களது குடும்ப நண்பரான மனிஷ் மல்ஹோத்ராவின் ஆர்ப்பாட்டமில்லாத ஃபுளோரல் கவுனில் குஷி கபூரும், ஐவரி நிற பிரின்ஸஸ் டாப் உடையில் ஸ்ரீதேவியும் மனிஷுடன் கை கோர்த்து ராம்ப் வாக் செய்தது கம்பீர அழகுடனிருந்தது.

7. ஷ்ரத்தா கபூர்…

ராகுல் மிஸ்ரா வடிவமைத்த செர்ரி பிளாஸம் நிறத்து பார்ட்டி வியர் நீளக் கவுனில் ஒரு தேவதையாகவே ஜொலித்தார் நடிகை ஷ்ரத்தா கபூர்…

8. மலாய்க்கா அரோரா…

ரித்தி மெஹராவின் முழு அடர் சிவப்பு நிற டிஸைனர் உடையில் மலாய்க்கா அரோரா ராம்ப் வாக்கிய ஒவ்வொரு நொடியும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 

9. க்ரிதி செனான்…

டிஸைனர் அர்பிதா மேதாவின் கருப்பும், ரோஸும் கலந்த லெஹங்கா உடையில் மாடல் க்ரிதி செனான் நிச்சயம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருப்பார் என நம்பலாம்.

10. கல்கி கோச்சலின்…

டிசைனர் நிகிதா மாசல்கரின் ஐவரி நிற பார்ட்டி அவுட்ஃபிட்டில் படு கிளாமர் லுக்கில் அசத்தினார் நடிகை கல்கி கோச்சலின்.

11. இலியானா டி குரூஸ்…

டிஸைனர் நான்ஸி லுகருவாலாவின் அடர் கறுப்பு நிற வெட்டிங் கவுனில் இழையோடிய தங்கம் மற்றும் வெள்ளி நிறப் பூச்சரிகை வேலைப்பாடு கொண்ட ஆடையில் பார்வையாளர்களை மெர்சலாக்கினார் நடிகை இலியானா டி குரூஸ்.

12. தியா மிர்ஸா…

டிஸைனர் குஸும் மற்றும் கரிஷ்மா லுகருவாலாவின் வடிவமைப்பில் தயாரான ஃபேபியான லேபிளுடன் கூடிய கிரீமி நிற கவுனில் என்றும் 16 ஆக ஒட்டுமொத்த பார்வையாளர்களின் விருப்பத்தையும் அள்ளிக் கொண்டார் நடிகை தியா மிர்ஸா.

13. பூமி பெமினேஹர்…

ருசேரு லேபிளின் கீழ் வடிவமைக்கப்பட்ட அடர் சிவப்பு நிற உடையுடன் கம்பீரமாக வலம் வந்த நடிகை பூமி பெட்னேஹர் தான் ஷோ டாப்பராம்.

14. அதிதி ராவ் கிதாரி…

ஜெயந்தி ரெட்டியின் ராயல் கிரியேஷன் சார்பாக வடிவமைக்கப் பட்ட கரும்பட்டும், வெள்ளிச்சரிகை வேலைப்பாடுகளும் ஊடாடிய நீண்ட கவுண் அதிதியின் அழகைப் பன்மடங்காக்கிக் காட்டியது.

15. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்…

கடைசியாக ராம்ப் வாக் செய்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டிஸைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் கருப்பு நிற ஃஃபுளோரல் டிஸைன் கவுனில் ராம்ப் வாக் செய்த விதம் பலரையும் ஈர்ப்பதாக இருந்தது.

<!–

–>