வரலாறு முக்கியம்: ஜீவாவின் புதிய படம்

 

ஜீவா நடிப்பில் 83 படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஜீவாவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்,பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்துக்கு வரலாறு முக்கியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ளார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, இசை – ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான்.  

வரலாறு முக்கியம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. பாடல்கள் மற்றும் பட வெளியீடு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>