வறண்ட சருமத்திற்கு 'பப்பாளி பேஷியல்'

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்க உதவும் சிறந்த பொருள் பப்பாளி. 

சருமம் வறண்டு காணப்படுவது தொடர்ந்தால் இளமையிலே முதுமைத் தோற்றம் வந்துவிடும். 

சருமத்திற்கு தேவையான சத்து கிடைக்க, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பப்பாளி பேஷியல் செய்யலாம். பப்பாளியை உணவாக எடுத்துக்கொண்டாலும் சருமம் பொலிவாகும். 

அழகு நிலையங்களில் ப்ரூட் பேஷியல் என்று சொல்லப்படுவது பழங்களுடன் சில ரசாயனங்களும் சேர்ந்ததுதான். எனவே, நீங்கள் வீட்டிலேயே  இயற்கையாக இதனைச் செய்யலாம். 

பப்பாளியைப் பயன்படுத்தி எவ்வாறு பேஷியல் செய்வது என்று பார்க்கலாம்.

நன்கு பழுத்த ஒரு பப்பாளியை எடுத்து அந்த சதைப் பகுதியை கையால் பிசைந்தோ அல்லது மிக்சியில் கூழாக்கியோ எடுத்துக்கொள்ளுங்கள். இதனை அப்படியே முகத்தில் பேக் போடலாம் அல்லது சிறிது தயிர் அல்லது தேன் கலந்தது போடலாம். பேக் போட்ட பிறகு ஒரு 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவலாம். 

வெறுமனே பப்பாளியை மட்டும் பயன்படுத்தி முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம். இல்லையெனில் பப்பாளிச்சாறுடன் சிறிது பால் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். பால் கூடுதலாக வழவழப்புத் தன்மை அளிக்கக்கூடியது. 

வாரத்திற்கு ஒருமுறை செய்துவர முகம் பளபளப்பாக மாறும். 

இதையும் படிக்க | உடல்நலம், சரும அழகைக் கெடுக்கும் 6 காரணிகள்!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>