'வலிமை' படத்தின் சென்சார் விவரம் வெளியானது

 

சமீபத்தில் வெளியான வலிமை பட உருவான விதம் குறித்த விடியோ அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. மேலும் வலிமை படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு யுவன்  ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | தம்பியை நடிகராக அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>