வலி  தீரும் வழி என்னவோ?

ஆதியிலே தாய் வழிச் சமுதாயம் இருந்ததாகவும், ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தாயே தலைவியாய், வழிகாட்டியாய், நம்பிக்கையாய் இருந்திருக்கிறாள் என்றும் மானுட சரித்திரம் பறைசாற்றுகிறது. மனித குலத்தை மறு உற்பத்தி செய்கிற சக்தி கொண்ட பெண்ணினத்தைத் தலைமை தெய்வமாய் ஏற்றுக் கொண்ட காலம் மாறி, சமுதாய அமைப்புக்கள் மாறி, இன்று பெண் இரண்டாந்தர குடிமக்களாய் வாழுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பெண்களுக்கு கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, ஓட்டுரிமை எனப் பல்வேறு வாழ்வியல் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் ஆண்களை விட அதிகம் உழைக்க வேண்டியுள்ளது; ஆனால் ஆண்களை விடக் குறைவான ஊதியமும் சலுகைகளும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது.

ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் குடும்பப் பணிகள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகப் பணிகள் என ஓய்வு ஒழிச்சலின்றி பலவித பணிச் சுமைகளை ஏற்று இயந்திரமாய் இயங்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் அவர்களது நோய் நொடிகளைக் கவனிக்க, ஆரோக்கியத்தைக் கவனிக்க நேரமில்லை. அதனால் தான் பெரும்பாலான  பெண்கள் பிணிகள் முற்றிய நிலையில் வேறு வழியின்றி சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஆயினும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்களுக்கு மாதவிடாய் என்பது நெருப்பை நீந்திக் கடப்பது போன்ற துயர அனுபவமாகவே இருக்கிறது. வலியின் கடுமையால் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மூலையிலேயே முடங்கிக் கிடப்பதும், தரையில் விழுந்து உருள்வதும் புரள்வதும் சாதாரணமாக நடக்கக் கூடியவை. ‘மாதவிடாயே ஏற்படாமல் இருந்தால் கூட நல்லது;  கர்ப்பப் பையை ஆபரேஷன் செய்து அதை வெளியே எடுத்து விட்டால் கூட நிம்மதி கிடைக்கும்’ என்று சிந்திக்கக் கூடிய அளவு சில பெண்களை மாதவிடாய் கால வேதனை வாட்டி வதைத்து விடும்.

வலிமிக்க மாதவிடாய் மருத்துவரீதியில் DYSMENORROHEA எனக் குறிப்பிடப்படுகிறது. அதன் பிரதான அறிகுறிகள்…மாடவிடாய் காலத்தில் அடிவயிற்றிலும், முதுகிலும், தொடைகளிலும் வலிகள் ஏற்படுகின்றன. நரம்பியல் காரணங்களாலோ, பிறப்புறுப்புகளில் ஏற்படும் ரத்தத் தேக்கத்தாலோ [CONGESTION], கர்ப்பப்யையின் உட்புறத் தோலில் ஏற்படும் நீர்வீக்கம் மற்றும் சில கோளாறுகளினாலோ, கர்ப்பப்பையின்  சளிச் சவ்வுகள் சிதைவடைந்து கட்டிகட்டியாகப் போக்கு ஏற்படுவதாலோ, கர்ப்பப்பையின் இடப் பெயர்ச்சியாலோ, கட்டிகள் போன்ற தேவையற்ற வளர்ச்சிகளாலோ, நாள்பட்ட மலச்சிக்கலாலோ கடுமையான மனநிலைப் பாதிப்புகளாலோ மாதவிடாயின் போது வலிகள் ஏற்படுகின்றன.

இவ்வலி தாக்கும் போது கர்ப்ப்ப்பையின் கழுத்து [CERVIX] வீங்கியிருக்கக் கூடும். இடுப்பு, தொடைப் பகுதிகளிலும் வலிகள் தாக்கக் கூடும். வலிமிக்க மாதவிடாய் நீடித்துக் கொண்டே சென்றால் மலட்டுத் தன்மை, ஹிஸ்டீரியா மற்றும் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும்.

இந்தப் பிரச்சினைக்கு  நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க உதவும் மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. அவரவர் குணங்குறிகளுக்கேற்ப கீழ்க்கண்ட மருந்துகளிலிருந்து தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் போது துயரங்கள் மறையும். வலியற்ற இயல்பான மாதப்போக்கு ஏற்படும்.

மருந்துகளும்  அவற்றின்   குறிகளும்

சிமிசிஃபியூகா : பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய். கரு நிறக் கட்டிகளாய் போக்கு குறைந்தளவு ஏற்படும்.போக்கு அதிகரித்தால் வலிகளும் அதிகரிக்கும். மாதவிடாயின் போது தலைவலி, கைகால் வலி, மூட்டு வலிகள், தொடை நரம்பு வலி, வலிப்பு மற்றும் உடல் வலிகள்.

கோலோசிந்திஸ் : குறைவான மாதவிடாய், இடது சினைப் பையில் வலி. மாதவிடாயின் போது கடுமையான அடிவயிற்று வலியும், குமட்டலும், வாந்தியும், பாதங்களில் குளிர்ச்சியும், கெண்டைத் தசைகளில் பிடிப்பு வலியும் ஏற்படும். உடலை முன்புறம் வளைத்தால் அல்லது அழுத்தினால் வலி குறையும்.

காலோபைலம் : குறைவான போக்கு, வலி உடலின் எல்லா பாகமும் பரவும். கெண்டை இழுப்பு, வலிப்பு, கடும் சோர்வு ஏற்படும்.

வைபூர்ணம் ஓபுலஸ் : தாமத விடாய், குறைவான அளவு, சில மணி நேரம் ஏற்படும். கடுமையான தசை இழுப்பு வலி. மாதவிடாய்க்கு முன் கர்ப்ப்ப்பையிலிருந்து, அடிவயிற்றிலிருந்து வலி கீழிறங்கி தொடைகளுக்குப் பாயும். பிரசவ வலி போல் விட்டு விட்டு வலிக்கும்.

காக்குலஸ் : உரிய நாளுக்கு முந்திய, நீடித்த, அதிகளவிலான போக்கு. [15 நாள்களுக்கு ஒரு முறைப் போக்கு] வயிறு உப்பி, ஊசி குத்துவது போல் வலி, அதிகச் சோர்வு.

போராக்ஸ் : முந்திய விடாய், சதைத் துண்டுகள் போல் அதிகப் போக்கு, கடுமையான வயிற்றுப் பிடிப்பு வலிகள்.

சைக்ளமென் : கருநிற சதைத் துண்டுகளாய் – பெரிய கட்டிகளாய் வயிற்று வலியுடன் போக்கு ஏற்படுதல், மாதவிடாயின் போது தலைவலி, மயக்கம், பார்வைக் கோளாறுகள் ஏற்படுதல், மாதவிடாய் நின்ற பின் மார்பகங்கள் வீக்கம் ஏற்படுதல், பால் சுரத்தல்.

செபியா : ஒழுங்கற்ற, தாமதமான, வலிமிக்க குறைந்த அளவிலான மாதவிடாய், மாதவிடாய்க்கு முன்பு வெளியுறுப்பில் எரிச்சல், வீக்கம், வயிற்று வலி, மாதவிடாயின் போது பல்வலி, தலைவலி, மூக்கிலிருந்து ரத்தம், மனக் கவலை எரிச்சல்.

சாந்தோசைலம் : மிகவும் முந்திய மாதவிடாயில் கருப்பை நரம்பு வலியானது இடுப்பு, தொடைகளுக்குப்  பரவும்.இட்து கருப்பையில் வலி. பயங்கர வலி உடல் முழுதும் [இருதயத்திற்கும் கூட] பரவும். மாதவிடாய் தோன்றும் போது வெள்ளைப்பாடும் தோன்றி அதிகளவு வெளிப்படுதல்.

பல்சடில்லா : தாமதமான, குறைவான, கருநிறப் போக்கு. அடிமுதுகிலும், பிறப்புறுப்பின் மேட்டுப் பகுதியிலும் வலி, விடாயின் போது வயிற்றுப் போக்கு, வயிறு இடுப்பு வலிகள், குமட்டல், வாந்தி, தலைவலி, தலைசுற்றல்.

மெக் பாஸ் : முந்திய, கருநிற மாதவிடாய். வலது பக்க சினைப் பையில் அதிக வலி. கர்ப்பப்பையிலிருந்து முதுகு வரை வலி பரவும். உஷ்ணத்தால் வலி குறையும்.

Dr.S.வெங்கடாசலம், மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் / Cell : 94431 45700/ Mail : alltmed@gmail.com

<!–

–>