வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

 

வஸந்த் எஸ். சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பார்வதி, லக்‌ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் நடிப்பில் வஸந்த் எஸ். சாய் இயக்கிய படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது. சோனி லைவ் ஓடிடியில் இப்படம் நவம்பர் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசை – இளையராஜா. ஒளிப்பதிவு – ஏகாம்பரம், ரவி சங்கரன். படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>