வாட்ஸ்ஆப்பில் ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில்..

LIB_whatsapp

கோப்புப்படம்

வாட்ஸ்ஆப் சாட்டிங்லேயே ஷாப்பிங் செய்யும் புதிய அம்சத்தை வெகு விரைவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிற்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களை புகுத்தி வருகிறது. 

அந்த வகையில், வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சத்தின் ஒரு பகுதியாக, அனைத்து வாட்ஸ்ஆப் வணிகக் கணக்கு(Business Account) பயனர்களும் சாட்டிங் மூலமாக தங்கள் பொருள்களை இதர வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதற்காக அனைத்து பயனர்களின் கணக்குகளிலும் தனியே ஒரு ஆப்ஷன் வழங்கப்படும். அதன்வழியே வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிக்க: வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!

கரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் வாட்ஸ்ஆப்பில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

இதில் விற்பனையாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு இது இலவசமாகவே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<!–

–>