'வாத்தி'யாக தனுஷ் : தமிழ் – தெலுங்கில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

 

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘வாத்தி’. இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஃபார்சுன் ஃபோர் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தப் படத்தை வெங்கட் அல்லுரி எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க | ராக்கி திரைப்படத்தை வெளியிட இணையதளங்களுக்குத் தடை

இந்தப் படம் தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெங்கட் அட்லுரி தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங் தே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>