வாயில் மற்றும் உதட்டில் உண்டாகும் வெள்ளை நிறம் மறைய

Beauty-face-yoga-THS-655x353

காய் : கோவக்காய் 

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : கோவைக்காய் (10), மாதுளம் பழத் தோல் (1 பழத்தோல்),  வெண்பூசணி விதை (10 கிராம்), அரசாணிக்காய் (150 கிராம்), புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு மோர் அல்லது தண்ணீர் நிறைய  ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  வடிகட்டி  வைத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்து விட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும். வில்வ மரத்தின் காயை உடைத்து அதன் மேல் ஒட்டை தாய்ப்பால் விட்டுத் தேய்த்து உதட்டில் தடவி வந்தால் திட்டுதிட்டான வெள்ளை நிறம் மாறும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

<!–

–>