வாழைப்பழத் தோலை தூக்கி எறியாதீங்க…!


பொதுவாக அனைவருமே வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவீர்கள்.

ஆனால், பழத்தைவிட தோலில் அதிக சத்துகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் ஆகிய சத்துகள் உள்ளன. 

வாழைப்பழத்தில் நேந்திரம், செவ்வாழை, கற்பூரவள்ளி, மலை வாழை, ரஸ்தாலி என்று பல வகைகள் உள்ளன. விலை மலிவானது என்று விட்டுவிடாமல் இவற்றில் ஏதேனும் ஒரு பழத்தை தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டு வர உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். 

இதையும் படிக்க | கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்க, மலச்சிக்கல் நீங்க, குடலை சுத்தம் செய்ய, இதயத்தைக் காக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என வாழைப்பழத்தின் பயன்கள் ஏராளம். 

வாழைக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பவர்களில் பலர் வாழைக்காயின் தோலையும் சமைத்து பொரியல் செய்து சாப்பிடுவதை கேள்விப்பட்டிருக்கலாம். 

இதற்கு காரணம் பழத்தைவிட தோலில் அதிக ஆன்டி ஆக்சிடன்ட் இருக்கிறது. குறிப்பாக வாழைப்பழத் தோலின் உட்பகுதியில்தான் சத்துகள் அடங்கியிருக்கின்றன. 

வாழைப்பழத் தோலை தொடர்ந்து சருமத்தில் மருக்கள், பருக்கள், சுருக்கங்கள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் விரைவில் அவை மறைந்துவிடும். மேலும் சருமம் பளபளப்பாக மாறும். 

இல்லையெனில் தோலின் உள்பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பேக் போடலாம். சருமத்தில் ஏற்படும் புண்கள் சரியாகவும் இதனைப் பயன்படுத்தலாம். 

இதையும் படிக்க | உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>