விக்னேஷ் சிவன் – நயன்தாரா படம் குறித்து தனுஷ் கருத்து: ரசிகர்கள் ஆச்சரியம்

‘தரமணி’ வசந்த் ரவி, பாரதிராஜா இணைந்து நடித்துள்ள படம் ‘ராக்கி’. அருண் மாதேஸ்வர்ன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் 2 வருடங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. 

இந்தப் படத்தை ஆர்ஏ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து, மதன் கார்கி, கபேர் வாசுகி ஆகியோர் எழுதியுள்ளனர். 

இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகினி ஆகியோ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் தகவலை பகிர்ந்த நடிகர் தனுஷ், ”இது மிகச்சிறந்த படம். இந்தப் படத்தில் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக அன்பிற்குரிய பாரதிராஜா கலக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக திறமையான இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>