'விக்ரமா இது?' 'கோப்ரா'வுக்காக மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் விக்ரம் (புகைப்படம்)

நடிகர் விக்ரம் மகான், கோப்ரா, இயக்குநர் ரஞ்சித் படம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இதில் மகான் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. 

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிக்க | ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் இணைவது உறுதி ?

இந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், வெளிநாட்டவர் போன்ற தோற்றத்தில் நடிகர் விக்ரம் இருக்கிறார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>