விக்ரமின் 'கோப்ரா' : முக்கிய தகவலை பகிர்ந்த இயக்குநர்

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்கு பிறகு இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதன் வில்லனாக நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ஆனந்த ராஜ், மியா ஜார்ஜ், மிர்னாளினி ரவி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தில் இருந்து தும்பி துள்ளல் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு பிறகு துவங்கிய ‘மகான்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆனால் இந்தப் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் விக்ரம் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். 

இதையும்  படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

இந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன் படி இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருவதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>