''விக்ரம் ஒரு நடிப்பு ராட்சசன்'': கோப்ரா பட புகைப்படங்களைப் பகிர்ந்த இயக்குநர்

நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்துக்கு பிறகு துவங்கப்பட்ட மகான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கோப்ரா படம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் கோப்ரா படம் குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், கோப்ரா படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | ’83’ படத்தில் தன்னை நினைவுபடுத்தும் சிறுவன் குறித்து சச்சின் கருத்து – ”அந்த சிறுவன்…”

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் கோப்ரா படத்தில் தனது பணிகளை நிறைவு செய்துவிட்டார். உங்களுடன் பணிபுரிந்தது அற்புதமான தருணம். நீங்கள் நடிப்பு ராட்சசன் என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>