'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் குறித்து வெளியான சுவாரசியத் தகவல்

மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. தமிழிலில் இயக்கிய புஷ்கர் – காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர். 

இந்தப் படத்தில் இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயீஃப் அலிகான் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மேலும், ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 27 நாட்களாக அபுதாபியில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இதையும் படிக்க | ”தமிழ் சினிமாவுக்கு கிடைத்த…”: மாநாடு படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சொன்ன கருத்து

இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இங்கு சயீஃப் அலிகான் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தை டி சீரிஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட், ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ், ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>