விசாரணை அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது வழக்குப்பதிவு

பிரபல மலையாள நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கேரளம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய அந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் நடிகர் திலீப் , அவருடைய சகோதரி உள்ளிட்ட 6 பேர்  விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறி அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் திலீப்  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க| பொங்கலுக்கு தமிழில் வெளியாகும் 8 படங்கள் – விவரம் இதோ

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>