விஜய்யை வழியனுப்பிவைத்த இயக்குநர் நெல்சன்! (புகைப்படம்)

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் விஜய் ஆக்ஷன் ஹீரோவாக துப்பாக்கியுடன் இருக்கும் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெல்சன் வெளியிட்டார். அதில் விஜய் புதுமையான கெட்டப்பில் இருந்தது ரசிகர்களை மேலும் கவர்ந்தது.

இதையும் படிக்கபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி ?

இந்த நிலையில், விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. நெல்சனும், விஜய்யும் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதைத் தொடர்ந்து, இந்தப் புகைப்படமும் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

முன்னதாக, பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பில், பீஸ்ட் படப்பிடிப்பு அனுபவங்களை பூஜா ஹெக்டே பகிரும் விடியோ இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>