விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ டிரைலர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் நேற்று(நவ.21) வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் இயக்குநர் மணிகண்டன்.

இதையும் படிக்க | விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர் கௌதம் மேனன்: அதிகாரப்பூர்வ தகவல்

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

டிரைலரில் மனநலம் பாதிக்கப்பட்ட வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>