விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' டீசர் குறித்த தகவல்

 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் இருந்து அனிருத் இசையில் 222, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இன்று 2022 ஆம் ஆண்டு 2வது மாதம், 2 ஆம் தேதி என்பதால் அதனைக் கொண்டாடும் விதமாக இந்தப் படத்தின் 222 பாடலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிக்க | காதலர் தினத்தில் வெளியாகும் இளையராஜாவின் புதிய பட அறிவிப்பு

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>