விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் : வெளியான போட்டோ

மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் விக்ரம் வேதா. இந்தப் படம் தற்போது ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீஃப் அலிகானும் நடித்து வருகின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர். 

இதையும் படிக்க | பொங்கலுக்கு தமிழில் வெளியாகும் 8 படங்கள் – விவரம் இதோ

இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோற்றத்தை அறிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, ரோஹிட் சரஃப், யோகிதா பானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>