விஜய் ஹசாரே: கர்நாடகத்துக்கு எதிராகச் சதமடித்த தமிழக வீரர் ஜெகதீசன்

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடகத்துக்கு எதிராகத் தமிழக வீரர் என். ஜெகதீசன் சதமடித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியின் காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கர்நாடக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் பாபா அபரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த என். ஜெகதீசன் – சாய் கிஷோர் ஆகியோர் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் என். ஜெகதீசன் 101 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் விஜய் சங்கர் 3 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>