விஜய் ஹசாரே போட்டி: தமிழக அணிக்கு எதிராக 114 ரன்களுக்குச் சுருண்ட பரோடா

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் தமிழ்நாடு – பரோடா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற பரோடா அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் 39 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரோடா இழந்தது. கிருனால் பாண்டியா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். எம். சித்தார்த், வாரியர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

மதிய உணவு இடைவேளையின்போது தமிழக அணி, 11.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>