விடியாமலே போயிருந்தால் என்ன? பிரியா பவானி ஷங்கரின் கவிதை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

 

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சில கவிதைகளை பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயற்கை காட்சிகளை பகிர்ந்து, மௌனம் பகிர்ந்து, கை விரல் பிடித்து கதை பேசிய இரவு, விடியாமலே போயிருந்தால்தான் என்ன?

இதையும் படிக்க | ‘வலிமை’ பட புதிய வெளியீட்டுத் தேதி இதுவா ?

உனக்கு மட்டும் கேட்ட என் மனம் இசைத்த பாடல் மொழி தேடாமல் உன்னோடே சேர்ந்து தூரம் போனது. வரிகளற்ற என் பாடலைத் திருப்பிக்கொடு. இம்முறை மௌனம் புரிய என்னிடம் நாம் இல்லை. வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள யானை, ஹாஸ்டல், பொம்மை, திருச்சிற்றம்பலம், பத்து தல, ருத்ரன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடித்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>