விடியோ: ''நான் சமந்தாவாகப் போறேன்'': சமந்தாவின் குட்டி ரசிகையைக் கலாய்க்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் ஒரு சிறுமியிடம் பேசும் நடிகை கீர்த்தி, பெரிய பெண் ஆனதும் என்னவாகப் போகிறாய் என்று கேட்க அதற்கு சமந்தாவாக போகிறேன் என்று அந்த சிறுமி பதிலளிக்கிறார். 

உனக்கு சமந்தா அவ்வளவு பிடிக்குமா என்று கேட்க, மிகவும் பிடிக்கும் என்று அந்த சிறுமி பதிலளிக்கிறார். இந்த விடியோவை சமந்தாவும் பகிர்ந்து யார் இந்த அழகி என்று கேட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷும், சமந்தாவும் இணைந்து நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ‘திருமணத்துக்கு முன் நடந்த கடைசி படப்பிடிப்பில்… ‘: பூர்ணிமா பாக்யராஜ் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்

கீர்த்தி சுரேஷ் தற்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிபாட்ட படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. மேலும் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்த சாணி காயிதம் படமும் வெளியீட்டு தயாராகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>