விண்ணில் பறக்கும் போது ஹாயாக ஒரு செல்ஃபி எடுத்த விமானி!

pilot-slfie1

எதற்கெல்லாம் செஃல்பி எடுப்பது என்று இளைஞர்களுக்கு வரம்பு முறையே இருப்பதில்லைல். ஒரு கூட்டத்தில் தனித்து தெரியும் நபர்களாக இந்த செல்ஃபி பிரியர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது ஒரு கூட்டமே செல்ஃபி வெறியர்களாக மாறியிருப்பது காலத்தின் சோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ பறக்கும் விமானம் ஒன்றின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து இப்படி ஒரு செஃல்பியை இந்த பைலட் எடுக்கவில்லை என்று யார் அழுதார்கள்? துபாய் விமானியான இவருடைய இந்த சாகஸ செல்ஃபி தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த செஃல்பி த்ரில்லர் வகையச் சார்ந்தது என்கிறார்கள். அதாவது யாரும் செய்ய முடியாத ஒரு நிகழ்வைச் செய்து அதை புகைப்படமாக்குவது. இதில் மிருகங்களுடன் செஃல்பி எடுப்பது, உயரமான இடத்தில் நின்று செஃபி எடுப்பது போன்றவை அடங்கும். ஆனால் சிலர் தன்னை மறந்து செஃல்பி எடுக்கும் போது சுற்றுயிருக்கும் ஆபத்தை உணரக் கூட முடியாமல் பரிதாபமாக இறந்து போகிறார்கள். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிக செல்ஃபி மரணம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

ஒரு விமானியின் முக்கிய பணி அனைவரையும் பத்திரமாக உணரச் செய்து பயண நேரத்தில் பாதுகாப்பு அளிப்பது. ஆனால் இந்த இளம் விமானியான செஃல்பி பிரியர் பறக்கும் விமானத்தில் மேகங்கள் மிதக்கும் வெளியை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி செல்ஃபி எடுத்துள்ளதுள்ளார். உண்மையில் இந்தக் காட்சி பார்க்க அழகாக இருந்தாலும், இது அவர் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் சற்று பதை பதைக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவர் சில புகைப்படங்களைப் பதிவிட்டவுடன் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்தனவாம். தவிர சிலர் அது உண்மையான செஃல்பி இல்லை. விமானியின் தலைமுடி காற்றில் சற்றும் கலைந்திருக்கவில்லை. எனவே ஏதோ மார்ஃபிங் வேலை என்றும் கூறிவருகின்றனர். 

உண்மையோ பொய்யோ இது போன்ற செஃல்பிக்களை யாரேனும் பதிவிட்டால் அதை நிராகரிக்க வேண்டும். 

<!–

–>