விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயற்சி – வைரலாகும் விடியோ

நடிகர் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது பின்னாடி ஒருவர் அவரை பாய்ந்து வந்து தாக்க முயற்சிக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியை சுற்றி இருந்தவர்கள் உடனடியாக அவரை தடுக்கின்றனர். 

இதையும் படிக்க | ‘ஜெய் பீம்’ படத்தால் மீண்டும் மொழி பிரச்னை : ஹிந்தி பேசுபவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல்

இதனையடுத்து அவரை விமான நிலைய காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியை தாக்க வந்தது யார் என்பதும் அவரது நோக்கம் குறித்தும் விரைவில் தெரியவரும். 

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வசால், ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர்களின் அடுத்த இணைய தொடர் என பரபரப்பாக நடித்து வருகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>