விலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்!

iphone_8

ஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து. காரணம் அதன் வேகம் மற்றும் பிராண்ட் நேம் போன்றவற்றால் அது தனித்துவமாக இருந்து வருகிறது. ஆனால் ஐஃபோன் வாங்க நினைப்பவர்கள் முதலில் யோசிப்பது அதன் விலைதான். மற்ற ஸ்மார்ட்ஃபோன்களைவிட அதிகமான விலையில் தான் ஐஃபோனை வாங்க முடியும். ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX இரண்டுமே செல்ஃபோன் பிரியர்களுக்கிடையே அமோக வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் gX -ல் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் கிடைக்கும். அதாவது சந்தையில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைவாக இருக்குமாம்.

<!–

–>