விஷாலின் 'வீரமே வாகை சூடும்' பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆர்யாவுடன் விஷால் இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து து.பா.சரவணன் இயக்கத்தில் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் விஷால் நடித்துள்ளார். இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மறைந்த இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | ”இவருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது” : நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட நாயகி நெகிழ்ச்சி

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>