வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு அண்மையில் சென்னை திரும்பினாா்.

இதையும் படிக்க- புத்தாண்டு: தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

விமான நிலையத்திலேயே அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டாா்.

அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த வடிவேலு மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>