வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம்: டி20 தொடர் வெற்றி குறித்து ரோஹித் சர்மா

 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்தியா.

இந்த கடைசி ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூசிந்து 17.2 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டி20 தொடர் வெற்றி பற்றி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

பந்துவீச்சு இந்த டி20 தொடரில் சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்தின் அதிரடியான தொடக்கத்துக்குப் பிறகு முதல் இரு ஆட்டங்களில் நன்கு மீண்டு வந்தோம். அதிரடி வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை 160 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது அபாரம். மூன்று ஆட்டங்களிலும் நன்றாக விளையாடினோம். மைதானத்துக்குள் நுழையும்போது எத்தனை ரன்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்றுதான் பார்ப்பேன். மூன்று ஆட்டங்களிலும் நாங்கள் 15 ரன்களைக் கட்டுப்படுத்தினோம். 3-வது டி20 ஆட்டத்தில் கூடுதலாக இரு ரன் அவுட் வேறு. 

அணியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முயல்கிறோம். வீரர்களுக்குப் பாதுகாப்பை வழங்கிறோம். அதனால் அவர்கள் மைதானத்தில் பயமில்லாமல் விளையாடி தங்களை வெளிப்படுத்த முடியும். அணியில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே இதைத் தெளிவாகச் சொன்னோம் – நீங்கள் அணிக்காக ஏதாவது முயற்சி செய்தால் அது நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும். நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் முயற்சியைத் தொடருங்கள் என்று வீரரிடம் சொல்ல வேண்டியது கேப்டன், பயிற்சியாளரின் கடமை. அது சரியாக அமையாவிட்டாலும் வீரருக்கு ஆதரவாக இருக்கவேண்டும். ஏனெனில் அணியின் வெற்றிக்காக அவர் முயற்சி மேற்கொள்கிறார் என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>