'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுடன் நடிக்கும் 'பிக்பாஸ் 5' பிரபலம் ? வெளியான புகைப்படம்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். 

இதையும் படிக்க | ஓடிடியில் தனியாக பிக்பாஸ் : பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்களா ?

இந்த நிலையில் பிக்பாஸ் 5 போட்டியாளர் வருண் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்புவுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. வருண் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேசின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு தயாரிப்பாளராக வருண் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ஜோஸ்வா இமை போல் காக்க படத்தில் நாயகனாக வருண் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>