வெளிப்படையாக காதலை அறிவித்த 'அம்மன்' சீரியல் ஜோடி: இருமாநிலங்களை இணைக்கும் பந்தம்

தொலைக்காட்சி தொடர்களில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் செய்திகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஸ்ரேயா-சித்து, மதன்-ரேஷ்மா, ஷபானா-ஆர்யன் என அந்தப் பட்டயல் நீளம். 

அந்த வரிசையில் சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அம்மன் தொடரில் ஜோடியாக நடிக்கும் அமல்ஜித்தும், பவித்ராவும் இணைந்துள்ளனர். இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர். 

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட வெளியீடு குறித்து கசிந்த தகவல்

ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து என்னுடைய பாதி என்பது போல குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து இருவரின் திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த பவித்ரா, கேரளாவின் மருமகளாக இருக்கிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>