வெளியானது ’டான்’ திரைப்படத்தின் அடுத்த பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் ’பே’ பாடல் இன்று வெளியானது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டான். அனிருத் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒமைக்ரான் வருகை காரணமாக திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்கநடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

இதையடுத்து, மார்ச் 25-ம் தேதி படம் வெளியாகும் என புதிய வெளியீட்டுத் தேதியை படக் குழு அறிவித்தது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ’பே’ இன்று வெளியானது. சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

டான் படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான ஜலபுல ஜங் பாடல் மெகா ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>