வெளியானது நடிகர் அஜித்தின் 'வலிமை' டிரெய்லர் !

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | தமிழின் முன்னணி இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புது காலை விடியாதா டீசர் இதோ

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>