வெளியானது ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இறுதி பாகம்

உலக அளவில் பிரபலமடைந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இறுதி பாகம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

மணி ஹைஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின கொள்ளைச் சம்பத்தை மையமாகக் கொண்டு உருவான இத்தொடரின் காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உலகளவில் பிரலமடைந்தது.

இதையும் படிக்க | சின்னத்திரை நடிகையின் புகைப்படத்தை தவறாக சித்திரித்து பகிர்ந்தவர்கள் கைது

குறிப்பாக கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹெய்ஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் பாகத்தின் முதல் அத்தியாயம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி இன்று நெட்பிளிக்ஸில் வெளியானது.

மேலும் மணி ஹெய்ஸ்ட் கதாப்பாத்திரமான ‘பெர்லின்’-யை வைத்து தொடரை நீட்டிக்க இருப்பதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>