வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையை படைத்த ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'

‘அண்ணாத்த’ படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் ‘அண்ணாத்த’ படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. 

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ வெளியாவதற்கு முன்பே புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு தமிழ்படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை. 

இதையும் படிக்க | ‘விதை நீங்க போட்டது’ – நடிகர் கமலுக்கு சூர்யா பதில்

மேலும் பிரான்ஸிலும் அதிக திரையரங்கில் வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையையும் அண்ணாத்த கைப்பற்றியுள்ளது. இது மட்டுமல்லாமலல் உலகின் பெரிய திரையரங்கான ஆஸ்திரேலியாவில உள்ள சிட்னியில் அமைந்துள்ள தி பேனாசோனிக் ஐமேக்ஸ் திரையரங்கில் அண்ணாத்த படம் வெளியாகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>