வெள்ளைப்பாடு தொல்லையிலிருந்து விடுதலை!

பெண்களின் பிறப்புறுப்புத் தசைப் பகுதியிலிருந்தும், கருப்பையின் வாய் மற்றும் உள்சுவர்களிலிருந்தும் ஒருவித பிசுபிசுப்பான திரவம் (VAGINAL DISCHARGE) இயற்கையாகவே சுரக்கிறது. பிறப்புறுப்புப் பகுதிகள் எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கவும், உறுப்புகளுக்கிடையில் உராய்வு ஏற்படாதிருக்கவும் இச்சுரப்பு உதவுகிறது.

சாதாரணமாக மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட  நாள்களில்- சினைமுட்டை வெளிவரும் நாளையொட்டி (OVULATION PERIOD) இத்திரவம் அதிகம் சுரக்கக்கூடும். சிலருக்கு மாதவிடாய்க்குச் சிலநாள் முன்பாகவோ அல்லது மாதவிடாய் முடிந்த பின்போ இச்சுரப்பு சற்று அதிகரிக்கிறது. வேறு சில சூழ்நிலைகளிலும் மிகுவதுண்டு.

பருவமடையக் காத்திருக்கும் பெண்களிடமும், சமீபத்தில் பருவமடைந்த பெண்களிடமும் அதிகம் சுரக்கலாம். கர்ப்பகாலத்தில் அதிகமிருக்கலாம். உடலுறவில் பெண் உச்ச நிலை உணர்ச்சியை அடையும் போது அதிகரிக்கலாம். இது உடலியல் தேவை. இது குறித்து பெண்கள் கவலையோ, பயமோ கொள்ளத் தேவையில்லை.

ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக சோம்பலான, ஆடம்பர வாழ்க்கை அதீக உடலுறவு ஈடுபாடு, பிறப்புறுப்புகளைச் சுத்தமாக பேணாமை, கர்ப்பப்பை, பிறப்புறுப்பில் புண்கள், அழற்சி, கட்டிகள் இருந்தல் போன்ற காரணங்களாலும் இயக்குநீர் (HORMONES) குறைப்பாடுகளாலும், இனப்பெருக்கமண்டல பலவீனங்களாலும், பாலியல் தவறுகளாலும் வெள்ளைப்பாடு விபரீதமாக ஏற்படுகிறது. அப்போது இயல்பான திரவச்சுரப்பு போலின்றி அளவு, நிறம் மாறிவிடுகிறது.  துர்நாற்றமும் அரிப்பும், உள்ளாடை நனையுமளவும், ஆடையில் பட்ட கறை போகாதளவும், கால் வழியே வழிந்தோடி வருமளவும் வெள்ளைப்பாடு தீவிரப்படுகிறது.

வெள்ளைப்பாடு வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல், நிறமின்றியோ, வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ, பச்சையாகவோ, ரத்த நிறமாகவோ வெளிப்படுகிறது. நீர்போல், பால்போல், பசைபோல், சீழ்போல், தயிர்போல் முட்டை வெண்கரு போல் பலவிதங்களில் பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. மாதப்போக்கிற்குப் பதிலாக முழுவதும் வெள்ளைப்பாடாக வெளியேறும் துயரத்தையும் சில பெண்கள் அனுபவிக்கின்றனர்.

பொதுவாக வெள்ளைப்பாடு, காரணமாக புணர்புழைப்பகுதி அதிகம் பாதிக்கப்படுகிறது. அரிப்பினால் சொறிந்து புண்ணும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் வீக்கமும், உடறுறவின் போது எரிச்சலுடன் கூடிய வேதனையும், நீர்க்கடுப்பும் ஏற்படுகின்றது. இடுப்புவலி, அடிவயிற்றுவலி, சினைப்பைகள் கருப்பை, கருப்பை இணைப்புக் குழல்கள் பாதிக்கப்படுகிறது. கடுமையான உடல்சோர்வும், மனசோர்வும் சிலசமயம் காய்ச்சலும் தாக்குகிறது. ஜீரணப்பாதிப்பு, படபடப்பு, மூச்சுத்திணறல், மாதவிடாய் போக்கில் தகாத மாறுதல்கள் ஏற்படுகிறது. சிலருக்கு மலட்டுத் தன்மையும் ஏற்பட்டு விடுகிறது. அதிகளவு வெள்ளைப்பாடுள்ள பெண்கள் பிள்ளை பெற்றால் வலிப்பு உட்பட பல ஆபத்தான வியாதிகள் குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. வளரும் பருவத்தில் காசநோய் தாக்கலாம்.

கருப்பை சார்ந்த கோளாறுகளால் பலருக்கும் வெள்ளைப்பாடு மிகுதியாக ஏற்படுகிறது. கருப்பை வாய்ப்பகுதி அழற்சி, புண், சிறு கட்டிகள் உண்டாதல் காரணமாக மஞ்சள்நிற வெள்ளைப்பாடு வரக்கூடும். அடிவயிற்றில் கடும்வலியும் ஏற்படும் சில பெண்களுக்கு அழுகல் கருச்சிதைவு ஏற்படும்போதும், பிரசவத்திற்குப்பின் நீடித்த அசுத்தத்தாலும், அரைகுறையானக் கருக்கலைப்புக்கு ஆளாவதாலும் கருப்பையில் சீழ்தன்மையிலான வெள்ளைப்பாடு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் வெளிப்படும் கர்ப்பப்பையில் கட்டி, புற்று உள்ள பெண்களுக்கு மிகுந்த துர்நாற்றமுள்ள வெள்ளைப்பாடு ஏற்படும். இது ஆபத்தானது, இதன் ஆரம்ப அறிகுறி செங்கல் நிறத்தில் விட்டுவிட்டுக் கசிந்துவரும். பின்னர் அதிகளவிலும், உள்ளாடை நனைந்து விடுமளவும், இரத்தம் கலந்தும் கூட வெளிப்படும். இத்தகைய நிலையில் ஆங்கில மருந்துவத்தில் டூச்சிங் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் முழுநலம் பெறுதல் என்பது கானல் நீர்தான். ஆனால் மொத்தக்குறிகளுக்கேற்ப ஹோமியோ மருந்து கொடுத்து மிகச் சிறந்த பலன் காணலாம். முதுமையில்(SENILE VAGINTIS) புணர்புழை அழற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைப்பாடில் இரத்தம் கலந்திருக்கக்கூடும். ஆனால் அது புற்று அல்ல பயமும் தேவை இல்லை.

பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம் ஏற்படும் வெட்டை நோய் (GONORRHOEA)  கிரந்தி நோய் (SYPHILLIS) காரணமாகவும் வெள்ளைப்பாடு துயரம் நிகழ்கிறது. யோனி உதடுகளில் புணர்வழியில் குழிப்புண்கள் உருவாகி எந்த நேரமும் வேதனை இருக்கும். சிறுநீர்க்கடுப்பும் இருக்கும். கருப்பைக் கழுத்து வழியாக, கருப்பை இணைப்புக் குழல்கள் வரை பாதிப்பு பரவி கடும் அடிவயிற்று வலியுடனும் இடுப்பு வலியுடனும் சீழ்போன்ற மஞ்சளான வெள்ளைப்பாடு ஏற்படுகிறது.

பெண்ணுறுப்பில் ‘காப்பர் டி’ லூப் போன்ற கருத்தடைச் சாதனங்களைப் பொருத்துதல், செருகு மாத்திரைகளை (அலோபதி) பயன்படுத்துதல், களிம்புகள், சிலவகை மருந்துகள் காரணமாக அழற்சி உருவாகி வெள்ளைப்பாடு ஏற்படுமானால் அவற்றை நீக்கினால் மட்டுமே வெள்ளைப்பாடும் நீங்கும்.

வெள்ளைப்பாடுள்ள பெண்கள் தம் பிறப்புறுப்பை குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் தினமும் 2,3 தடவை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். எளிய உணவுப்பழக்கம், எளிய உடற்பயிற்சிகளும் அவசியம். இவ்வியாதிக்கு 80 சதவீதம் பெண்கள் ஆளாகியிருந்தாலும் மருத்துவம் செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களும் ஆங்கில மருந்துகள் மூலம் தற்காலிக நிவாரணம் மட்டுமே பெறுகின்றனர். மேலும் கர்ப்பப்பையைச் சுத்தம் செய்வது எனும் பெயரில் ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர். இதனால் வேதனையும் கர்ப்பப்பை அழற்சியும்தான் மிஞ்சும்.

வெள்ளைப்பாடு துயரிலிருந்து விடுதலை பெற ஹோமியோபதியில் பலமருந்துகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணின் மனநிலை, உடல்நிலை, தனிதன்மைகள் போன்ற மொத்தக் குறிகளுக்கேற்ப ஹோமியோ மருந்து கொடுக்கப்படும் போது வெள்ளைப்போக்குப் பிணி பனிபோல் விலகும். வெள்ளைப்பாடுத் துயரை நீக்க உதவும் சில ஹோமியோ மருந்துகள்.{pagination-pagination}

வெள்ளைப்பாடு நிறமும், தன்மையும் மருந்துகளும்

முட்டை வெண்கரு போன்ற, வெதுவெதுப்பான, தெளிவான

வெள்ளைப்பாடு – போராக்ஸ்

நீர்போன்ற, அரிக்கக்கூடிய, கால்கள் வழியே வழியுமளவு அதிக வெள்ளைப்பாடு – அலுமினா

பால் போன்ற வெள்ளைப்பாடு – பல்சடில்லா

பால் போன்ற கெட்டியான நாற்றமுள்ள வெள்ளைப்பாடு நீர்போன்ற ஏராளமான பாதம் வரை வழியும் மஞ்சள்நிற வெள்ளைப்பாடு –  செபியா

மீன் நாற்றமுள்ள காரமுள்ள, நீர்க்கொப்பளம் உண்டாக்கக்கூடிய வெள்ளைப்பாடு –  சிபிலினம்

சிவப்பான வெள்ளைப்பாடு – மெடோரினம்

ரத்தம் கலந்த தடித்த வெள்ளைப்பாடு – சைனா / லைகோபோடியம்

துவைத்தாலும் போகாத ஆடையில் மஞ்சள் கறையை ஏற்படுத்தும் நாற்றமுள்ள ஏராளமான வெள்ளைப்பாடு – வைபூர்ணம் ஓபுலஸ்

பிறப்புறுப்பில் கடும் அரிப்பை ஏற்படுத்தும், காரத்தன்மையுள்ள, ஏராளமான வெள்ளைப்பாடு, பிறப்புறுப்பிலும் தொடையிலும் பலவீனத்தையும் கடும்வலியையும் ஏற்படுத்தும்  – பியூலெக்ஸ்

அரிசிக்கஞ்சி போன்ற வெள்ளைப்போக்கு இறைச்சி கழுவிய நீர் போன்ற வெள்ளைப்போக்கு – கிரியோசோட்டம் ஃபெர்ரம் அயோடு

மாதவிடாய் 1 நாள் மட்டும் இருக்கும், 2 ஆம் நாளிலிருந்து ரத்தம் கலந்த வெள்ளைப்பாடு வெளியேறும் – நைட்ரிக் ஆசிட்

தண்டுவடமே உடைந்துவிட்டது போன்ற முதுகுவலி ஏற்படுத்தும் வெள்ளைப்பாடு – காலி அயோடு ரேடியம் ஓவாடோஸ்டா

 

Dr.S.வெங்கடாசலம் – மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

<!–

–>