சிம்புவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ‘மாநாடு’ படத்தின் வெற்றி அமைந்துள்ளது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’, கௌதம் கார்த்துக்குடன் இணைந்து ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார்.
இதில் கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது ‘மாநாடு’ படத்தின் வெளியீடு காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.
இதையும் படிக்க | விக்னேஷ் சிவன் – நயன்தாரா படம் குறித்து தனுஷ் கருத்து: ரசிகர்கள் ஆச்சரியம்
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை நடிகர் சிம்பு துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பு ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>