‘ஸ்பா’ சென்ட்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 35 வெளிநாட்டுப் பெண்கள் கைது!

sex_trade_in_spa_centre

உத்தரபிரதேச மாநிலம், நொய்டா 18 வது செக்டர், வணிக மையப் பகுதியில் இயங்கும் சில ஸ்பா சென்ட்டர்களில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாகப் புகார் எழுந்ததை ஒட்டி  கெளதம் புத் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் தலைமையில் நேற்று மாலையில் அங்கிருக்கும் 14 ஸ்பா சென்ட்டர்களில் நொய்டா காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீண்டதாகத் தகவல்.

சுமார் 7 சர்க்கிள் அதிகாரிகள்,  8 காவல்நிலைய அதிகாரிகள், ஆண்களும், பெண்களுமாக 30 துணை ஆய்வாளர்கள், ஆன், பெண் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 14 போலீஸ் டீம்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியதில் அப்பகுதியில் இயங்கி வந்த ஸ்பா சென்ட்டர்களில் கணிசமான அளவில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சோதனையில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள். கைதானவர்களில் கணிசமானவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட அயல்நாட்டுப் பெண்கள். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ 1 லட்சம் பணமும், பீர் பாட்டில்களும், பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத ஆணுறைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆய்வாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

சோதனை நடத்தப்பட்டு குற்றம் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 14 ஸ்பா சென் ட்டர்களுக்கும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 ஸ்பா சென்ட்டர்களில் வெகு நிச்சயமாகப் பாலியல் தொழில் நடத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்.

சம்மந்தப்பட்ட ஸ்பா சென்ட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அவற்றின் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் போதைப் பொருள் பயன்பாட்டிலும் இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட முன்னணியில் இருப்பது முன்னரே அறிந்த செய்தி தான். இந்நிலையில் ஸ்பா சென்ட்டர்கள் என்ற பெயரில் வெளிநாட்டுப் பெண்களை வேலைக்கு எடுத்து அவர்களைத் தங்களது சுயநலத்திற்காக பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருப்பதாக அறியும் போது மக்களுக்கு ஸ்பா சென் ட்டர்கள் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

<!–

–>