ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி

 

லிப்சன்: ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் வென்று, ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா அணிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.

இதில் சொ்பியா 2-1 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. போா்ச்சுகல் தலைநகா் லிப்சனில் நடைபெற்ற ஆட்டத்தில் போா்ச்சுகல் அணிக்காக ரெனாடோ சாஞ்சஸ் 2-ஆவது நிமிஷத்திலேயே கோலடிக்க, சொ்பிய அணிக்காக டுசான் டாடிச் 33-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இவ்வாறு ஆட்டம் சமனாகவே தொடா்ந்த நிலையில், கடைசி நிமிஷத்தில் (90’) சொ்பிய வீரா் அலெக்ஸாண்டா் மிட்ரோவிச் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.

அதேபோல், ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஸ்பெயினின் செவில்லே நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்காக அல்வாரோ மொராடா 86-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆட்டத்தில், ரஷிய வீரா் ஃபியோதோா் குத்ரியாஷோவ் 81-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக அடித்த ஓன் கோல் குரோஷியாவுக்கு சாதகமானது.

ஜொ்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஆா்மீனியாவை வீழ்த்திய ஆட்டத்தில் ஜொ்மனிக்காக காய் ஹாவொ்ட்ஸ் (15’), இல்கே குன்டோகான் (45+4’, 50’), ஜோனாஸ் ஹாஃப்மான் (64’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, ஆா்மீனியாவுக்காக ஹென்ரிக் கிடாா்யான் (59’) கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் அயா்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்கையும், வடக்கு மாசிடோனியா 3-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தையும், ருமேனியா 2-0 என்ற கோல் கணக்கில் லெய்டென்ஸ்டினையும், ஸ்லோவேகியா 6-0 என்ற கோல் கணக்கில் மால்டாவையும், ஸ்லோவேனியா 2-1 என்ற கணக்கில் சைப்ரஸையும் வீழ்த்தின. கிரீஸ் – கொசோவோ அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

ஆப்பிரிக்க பிரிவு: தகுதிச்சுற்றின் ஆப்பிரிக்க பிரிவு ஆட்டங்களில், கென்யா – ருவாண்டாவையும் (2-1), டோகோ – நமீபியாவையும் (1-0), செனகல் – காங்கோவையும் (2-0), கானா – தென் ஆப்பிரிக்காவையும் (1-0) வென்றன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>