ஸ்ரீதேவியுடன் இருக்கும் பழைய படத்தை பகிர்ந்த அமிதாப்: சரியாக கண்டுபிடித்த ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தி திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் மரணமடைந்தார். 

நடிகர் அமிதாப் பச்சன் பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு நடிகை அமிதாப்பின் பெல்ட்டை பிடித்திருப்பதுபோல் உள்ளது. நடிகையின் உருவம் அந்தப் புகைப்படத்தில் நீக்கப்பட்டு கை மட்டும் இடம்பெற்றிருந்தது. 

இதையும் படிக்க | தன் பட எழுத்தாளரை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா பட இயக்குநர்

அந்த நடிகை யார் என்று அமிதாப் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியிருந்தார். ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த நடிகைகள் பெயர்களை பதிலளித்தனர். இந்த நிலையில் அநத் நடிகை அமிதாப் பச்சன் அந்த நடிகை ஸ்ரீ தேவி என்று குறிப்பிட்டு முழுப் புகைப்படத்தையும் பகிர்ந்தார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>