ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸின் சலார் படக்குழுவின் பிறந்த நாள் பரிசு

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். 

இதையும் படிக்க | ‘விஜய் வழக்கில் தொடர் நடவடிக்கை கூடாது’ – நீதிபதி உத்தரவு

ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஆத்யா என்ற வேடத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக, ”படப்பிடிப்பு தளத்தில் சுறுசுறுப்பானவரும் எனது கதாநாயகி,  பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>