ஹிப்ஹாப் தமிழா இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'அன்பறிவு' டிரெய்லர் வெளியானது

சிவகுமாரின் சபதம் படத்துக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அன்பறிவு. சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில்  காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர், நெப்போலியன், விதார்த், சாய்குமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | கட் இல்லாமல் ஒரே டேக்கில் சிம்பு நடித்த மாநாடு காட்சி: 5 நிமிட விடியோவை வெளியிட்ட படக்குழு

இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளாரர். பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

இந்தப் படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>