ஹெல்மட்டில் தாக்கிய பந்து: மருத்துவமனையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் (விடியோ)

இலங்கையுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது பந்து தாக்கியதில் காயமடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அறிமுக வீரர் ஜெரெமி சோலோஸனோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிக்கதொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா? இன்று கடைசி டி20 ஆட்டம்

இலங்கை முதல் இன்னிங்ஸின் 24-வது ஓவரில் கருணாரத்னே பந்தை ‘லெக்’ திசை நோக்கி அடித்தார். அந்தப் பந்து, பேட்டருக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அறிமுக வீரர் சோலோஸனோ ஹெல்மட் மீது வேகமாகத் தாக்கியது. இதனால், அவர் நிலைகுலைந்துப் போனார்.

இதையடுத்து, ஸ்ட்ரெச்சர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>