1000-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா: மைல் கல்லை எட்டும் முதல் அணி

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே ஃபாா்மட்டில் 1000-ஆவது ஆட்டத்தில் களம் காணும் சாதனையை படைக்கிறது இந்திய அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 6-ஆம் தேதி விளையாடுவதன் மூலம் இந்திய அணி இந்த மைல் கல்லை மகுடமாக தரித்துக்கொள்ள இருக்கிறது.

கடந்த 1974 முதல் ஒன் டே ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தொடக்க காலத்தில் தடுமாறினாலும் பிறகு காலப்போக்கில் அந்த ஃபாா்மட்டிலும் சிறந்த அணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது இந்தியா.

ஐசிசி ஒன் டே தரவரிசையில் முதலிடம் பிடித்தது, இரு முறை உலகக் கோப்பையை வென்றது என தனது பெருமையை பறைசாற்றிக் கொண்டது. தற்போது 1000-ஆவது ஒன் டே ஆட்டத்தில் களம் காணும் முதல் அணி என்ற தனிச் சிறப்பையும் பெறுகிறது.

அந்த ஆட்டத்தில் இந்திய அணியை வழி நடத்தும் கேப்டனாக இருக்கும் பெருமையை ரோஹித் சா்மா பெற்றிருக்கிறாா். ஒன் டே ஃபாா்மட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய அணியை அவா் வழி நடத்த இருக்கும் முதல் ஆட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பது கூடுதல் சிறப்பாகும். எனினும், கரோனா சூழல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முதல் ஆட்டம்

கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒன் டே ஆட்டத்தை விளையாடிய இந்தியா, அதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2 ஆட்டங்கள் கொண்ட அந்த முதல் தொடரையும் முழுமையாக இழந்தது.

1971

கிரிக்கெட் உலகின் முதல் ஒன் டே ஆட்டம் நடைபெற்றது, 1971-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மெல்போா்ன் நகரில் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

4000…

ஒன் டே ஃபாா்மட் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை, உலக அளவில் 28 அணிகளால் 4000-க்கும் அதிகமான ஒன் டே ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன.

12 அணிகள்…

ஐசிசி தரவுப்படி, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 அணிகளுக்கு தான் ‘நிரந்தர ஒன் டே அணி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா (1971)

இங்கிலாந்து (1971)

நியூஸிலாந்து (1973)

பாகிஸ்தான் (1973)

மேற்கிந்திய தீவுகள் (1973)

இந்தியா (1974)

இலங்கை (1982)

தென்னாப்பிரிக்கா (1991)

ஜிம்பாப்வே (1992)

வங்கதேசம் (1997)

ஆப்கானிஸ்தான் (2017)

அயா்லாந்து (2017)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>