15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான்: ஜெய் ஷா உறுதி

15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றதற்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்கதோனியின் ரசிகராக வந்திருக்கிறேன்: சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் ஜெய் ஷா பேசியது:

“சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது தெரியும். அந்தத் தருணம் வெகுதொலைவில் இல்லை. 15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான் நடைபெறும். புதிய அணிகள் இணைவதால், சுவாரஸ்யம் மேலும் கூடவுள்ளது” என்றார் அவர்.

விழாவில் பின்னர் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தோனியின் ரசிகராகவே இந்த விழாவிற்கு வந்துள்ளதாகக் கூறினார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>