’3 முறை பாம்பு என்னைக் கடித்தது’: சல்மான் கான்

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், அறைக்குள் புகுந்த பாம்பு தன்னை 3 முறை கடித்ததாக தெரிவித்தார்.

சல்மான் கானின் 56-வது பிறந்தநாளான இன்று பல்வேறு திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சல்மான் கான் , கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தன் பண்ணைவீட்டில் இருந்தபோது திடீரென அறைக்குள் புகுந்த பாம்பு என் கைகளில் மூன்று முறை கடித்தது. பின் உடனடியாக மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டதால் ஞாயிற்றுக்கிழமை நலமுடன் வீடு திரும்பினேன்’ என தெரிவித்தார்.

மேலும், எஸ்.எஸ் ராஜமௌலியுடன் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு அதை மறுத்திருக்கிறார் சல்மான் கான்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>